மனதுக்குள்ளே ஒரு மஹாசக்தி

by டாக்டர் அனந்த் ராமன்


The author

டாக்டர் அனந்த் ராமன் ( Pen name : ஹாஸ்யாநந்தா)
[Dr. Anant Raman]
ஈ மெய்ல் முகவரி : hasyananda@gmail.com

பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுப் பல வருஷங்கள் வெளி
நாடுகளில் பொறியியல் வல்லுனராகப் பணியாற்றியபின் சென்னையின்
அருமையை தினமும் அனுபவிப்பவர்.
யோகக் கலை வல்லுநர், yoga course director,
நகைச்சுவைச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
இயற்கையை ஆராதிப்பவர். ஓவியக்கலையிலும், புகைப்படக் கலையிலும்
ஈடுபாடு கொண்டவர்.

About the Book

என் வாழ்வில் நான் சந்தித்த – என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த – சில அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எவ்வளவுதான் வேலையில் நிபுணராய் இருந்தாலும் கடின உழைப்பினால் உயர்நிலை அடைந்திருந்தாலும் அவை வாழ்க்கையின் ஒரு அம்சமே. அவற்றால் மனத்திருப்தியோ மன நிம்மதியோ கிடைப்பதில்லை.

வாழ்னாளின் உண்மையான பயனை அடைய சிறுவயது முதலே மனவளக் கலைகளையும் உடன் கற்று மனதை உள் முகமாக்கி நமக்குள்ளே நம்மை இயக்கும் ஆத்ம சக்தியை உணர்ந்து அந்த சக்தியில் ஒன்றரக் கலக்கும் பேராற்றலை அடைவதே மேன்மையான நிலை. அதனால் கிடைக்கும் மனத்திருப்தியும், மன நிம்மதியும் அளவிட முடியாதவை.

நம்மை சிரிக்க வைப்பதும், மனதை உள்நோக்கித் திருப்புவதும் மனதுக்குள்ளேயிருந்து இயக்கும் அந்த மாய சக்திதான். நான் கற்ற இந்த அரிய யோகப் பயிற்சி முறைகளைப் பற்றியும் உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் சிலராவது பயனடைந்தால் பெறுமகிழ்ச்சி கொள்வேன்.